உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்று விடுமுறை வழங்க ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை

மாற்று விடுமுறை வழங்க ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை

பொள்ளாச்சி;ஞாயிறு விடுமுறை நாட்களில் பணியாற்றும் ரேஷன் பணியாளர்களுக்கு, மாற்று விடுமுறை எடுக்க அரசு முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன்அறிக்கையில்கூறியிருப்பதாவது:அரசின் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் போது, பணி செய்யும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு, கார்டு ஒன்றுக்கு 50 பைசா வழங்கப்படுகிறது. இதை கார்டு ஒன்றுக்கு ஐந்து ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.ரேஷன் கடைகளுக்கு ஞாயிறு விடுமுறை நாளாக இருப்பினும், அன்று பணி நாளாகக் கருதி பணிபுரிய வேண்டும் என்றும், அதற்கு பதிலாக மாற்று விடுமுறை எடுத்து கொள்ளலாம் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் அது குறித்து, முறையான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. ஞாயிறு நாட்களில் பணியாற்றும் ரேஷன் பணியாளர்கள் மாற்று விடுமுறை எடுக்க, அரசு முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும்.ரேஷன்கடைகளில் ஊட்டி டீ துாள் விற்பனையை, அதிகரித்தால் விற்பனையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த தொகையும் கிடைக்கவில்லை. அதையும்வழங்கவேண்டும்.இவ்வாறு,தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ