உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சவுக்கு சங்கர் மீது  தாக்குதல்  விசாரணை அறிக்கை தாக்கல் 

 சவுக்கு சங்கர் மீது  தாக்குதல்  விசாரணை அறிக்கை தாக்கல் 

கோவை, : சவுக்கு சங்கர் மீது, சிறைக்குள் தாக்கப்பட்டது தொடர்பாக, சட்டப்பணிகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையினை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.சென்னையை சேர்ந்த சங்கர் என்பவர், 'சவுக்கு மீடியா' என்ற பெயரில் 'யு டியூப்' சேனல் நடத்தி வருகிறார். இவர், மற்றொரு யு டியூப் சேனலில், பெண் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்து பேட்டி அளித்தார். புகாரின் பேரில், கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.இதற்கிடையில், சிறைக்குள் சங்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, கோர்ட்டில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டதன் பேரில், சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல்கள், அரசு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், சிறைக்கு சென்று விசாரணை மேற் கொண்டனர். அதன் அறிக்கையினை, தனித்தனியாக சீலிடப்பட்ட கவரில் வைத்து கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள், மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பிக்கும் போது தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை