உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணி ஓய்வு பாராட்டு விழா

பணி ஓய்வு பாராட்டு விழா

கோவை;கோவை அஞ்சல் கோட்டத்தில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலராக பணியாற்றிய சிவசண்முகம், பணி நிறைவு பாராட்டு விழா தொண்டாமுத்துார் அலுவலகத்தில் நடந்தது.விழா மலரை, ஓய்வு பெற்ற அஞ்சல் துறை ஊழியர் ஹரிஹரன் வெளியிட, மாநில மகிளா கமிட்டி உறுப்பினர் வள்ளி நாயகி பெற்றுக்கொண்டார்.பணிநிறைவு பாராட்டு விழாவில், முன்னாள் செயலர் ஸ்ரீதரன், மாநில செயலர் வீரமணி, மண்டல செயலர்கள் நாராயணன், குருசிவம், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ