உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளி தம்பதிக்கு ரோட்ராக்ட் கிளப் உதவி

மாற்றுத்திறனாளி தம்பதிக்கு ரோட்ராக்ட் கிளப் உதவி

சூலுார் : சூலுாரில் மாற்றுத்திறனாளி தம்பதிக்கு ரோட்ராக்ட் கிளப் சார்பில் உதவி செய்யப்பட்டது.சூலுார் அடுத்த செங்கத்துறை ரோட்டில் ஹவுசிங் யூனிட் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த தெரேசநாதன், விஜி தம்பதி மாற்றுத்திறனாளிகள். தெரேசநாதன் தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் அணியின் வீரர் ஆவார். இவர்களுக்கு உதவிட எண்ணிய ரோட்ராக்ட் கிளப் ஆப் கோயமுத்தூர் கேலக்ஸி அமைப்பினர், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி பி.காம்., துறையுடன் இணைந்து பெட்டி கடை அமைத்து கொடுத்துள்ளனர். குமரவேல் விற்பனையை துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு பொருளாதார உயர்வை அளிக்கும் வகையில் இந்நிகழ்வு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி