| ADDED : ஆக 18, 2024 01:39 AM
'பி' அரங்கில் 'ட்ரீம்ஸ் அக்வேரியம்' சார்பில் வண்ண மீன் காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அலங்கார மீன் வளர்ப்பில் என்ன அடிச்சுக்க ஆளே கிடையாது என்பவருக்கும், இனி தான் மீன் வளர்க்கப்போறேன் என்பவர்களுக்காகவும் அடிப்படையில் இருந்து அபூர்வ மீன்கள் வரைக்கும், 25க்கும் மேற்பட்ட வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.கடைகளை விட குறைவான விலையில் மீன்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், 'தினமலர்' வாசகர்களுக்காக மேலும் ஓர் அசத்தலான ஆபராக, 20 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது. கண்காட்சி அரங்கில் புக் செய்பவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் இச்சலுகை பொருந்தும்.மீன்கள் மட்டுமல்லாது, மீன் வளர்ப்புக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைக்கின்றன. குட்டீஸ்களுக்கு பரிசளிக்க சிறிய மீன் தொட்டி முதல் வரவேற்பறையில் வைப்பதற்கான மிகப்பெரிய தொட்டிகள் வரை விற்பனைக்கு வைத்திருக்கின்றனர்.