உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கணினி தமிழ், நுண்ணறிவு கல்லுாரியில் கருத்தரங்கு

கணினி தமிழ், நுண்ணறிவு கல்லுாரியில் கருத்தரங்கு

கோவில்பாளையம் : சரவணம்பட்டி பி.பி.ஜி., கலை அறிவியல் கல்லூரியின் கணினி தமிழ் பேரவை, சென்னை அரண் பண்பாட்டு தமிழாய்வு மின்னிதழ் மற்றும் அரண் தமிழ் அறக்கட்டளை இணைந்து, ஆசிரியர் திறன் மேம்பாட்டு இரண்டு நாள் கருத்தரங்கை, கல்லூரியில் நடத்தின. இதில் 'கணினி தமிழும், செயற்கை நுண்ணறிவும்' என்ற தலைப்பில் கருத்தரங்கில் பேசினர். தமிழ் துறை தலைவர் சந்திரகலா வரவேற்றார்.கல்லூரி முதல்வர் முத்துமணி பேசுகையில், ''அறிவியல் உலகத்தின் எதிர்பார்ப்பு அறிந்து, அதற்கு ஏற்ற கல்வியை கொடுப்பதுதான் கல்வி நிறுவனங்களின் முக்கிய கடமை,'' என்றார்.பேச்சாளர் பிரியா கிருஷ்ணன், ஆய்வியல் அறிஞர் சந்திரசேகரன் பேசினர்.கவையன் புத்தூர் தமிழ் சங்கத்தின் கார்த்திகேயன், தமிழ் ஒலிம்பியாட்டை அறிமுகம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !