உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிவாரண பொருட்கள் வழங்க சேவா பாரதி அழைப்பு

நிவாரண பொருட்கள் வழங்க சேவா பாரதி அழைப்பு

கோவை;கேரளாவில் நடந்த பேரழிவுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவிக்கரம் நீட்ட சேவாபாரதி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இருப்பிடம், உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அனுப்பும் பணிகளை சேவா பாரதி அமைப்பு தொடங்கியுள்ளது. அதன்படி, அரிசி, பருப்பு, எண்ணெய், போர்வை, பாய்கள், சோப்கள், பால் பவுடர், தட்டு, டம்ளர், கோதுமை மாவு, கிருமி நாசினி உள்ளிட்டவை அனுப்பிவைக்கப்படவுள்ளன.எனவே, கருணை உள்ளம் கொண்டவர்கள், வெங்கடசாமி ரோட்டில் உள்ள சத்குரு சேவாஸ்ரமத்தில் இன்று முதல் நிவாரண பொருட்களை நேரில் வழங்கலாம். நேரில் வர இயலாதவர்கள், 63803 73956, 86084 15240, 0422 2552034 ஆகிய எண்களில் தொடர்புகொண்டால் நிவாரண பொருட்களை நேரில் வந்து சேகரித்து கேரள மக்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என, சேவா பாரதி மாநில கவுரவ தலைவர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ