கோவை:மாநில அளவிலான சீனியர் ஆண்கள் கூடைப்பந்து போட்டியில், லயோலா கல்லுாரி அணி சாம்பியன் கோப்பையை வென்று, அகில இந்திய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.பி.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 'பி.எஸ்.ஜி., கோப்பைக்கான' 8ம் ஆண்டு மாநில கூடைப்பந்து போட்டி, பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரி வளாகத்தில் உள்ள பி.எஸ்.ஜி., உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.இதன் லீக் சுற்றுக்கு சென்னை, லயோலா கல்லுாரி அணி, கோவை யுனைடெட் கூடைப்பந்து கிளப், சென்னை எஸ்.டி.ஏ.டி., மற்றும் கோவை சிக்ஸர்ஸ் அணிகள் தகுதி பெற்றன.பரபரப்பாக நடந்த லீக் சுற்றில், லயோலா, எஸ்.டி. ஏ.டி., மற்றும் யுனைடெட் அணிகள் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அதிக புள்ளிகள் அடிப்படையில் லயோலா அணி முதலிடத்தை பிடித்தது.இரண்டாமிடத்தை, சென்னை எஸ்.டி.ஏ.டி., அணி பிடித்தது. யுனைடெட் கிளப் மூன்றாமிடத்தை பிடித்தது. இதில், முதல் இடம் பிடித்த லயோலா கல்லுாரி அணி பி.எஸ்.ஜி., சார்பில் நடக்கவுள்ள, அகில இந்திய கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது. சிறந்த வீரராக, லயோலா கல்லுாரி வீரர் அஜய் தேர்வு செய்யப் பட்டார்.வெற்றி பெற்றவர்களுக்கு, பி.எஸ்.ஜி., நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன், கோவை மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவர் செல்வராஜ், பி.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ருத்ரமூர்த்தி, பி.எஸ்.ஜி., கல்லுாரி முதல்வர்கள் பிரகாசன், கிரிராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.