உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில செஸ்; கோவை வீரர் சாம்பியன்

மாநில செஸ்; கோவை வீரர் சாம்பியன்

கோவை:மாநில அளவிலான ஓபன் செஸ் போட்டியில், கோவையை சேர்ந்த ஆகாஷ் முதலிடத்தை பிடித்து அசத்தினார்.தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், கோவை மாவட்ட செஸ் சங்கம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், 74வது தமிழ்நாடு மாநில ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, நவ இந்தியா இந்துஸ்தான் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.இப்போட்டியில், 35 மாவட்டங்களில் இருந்து 276 சர்வதேச தர போட்டியாளர்கள் உட்பட 504 பேர் பங்கேற்றனர். ஒன்பது சுற்றுகளாக நடந்த இப்போட்டியின் முடிவில், கோவை வீரர் ஆகாஷ் எட்டு புள்ளிகள் எடுத்து, முதலிடத்தை பிடித்தார்.இரண்டாமிடத்தை, 7.5 புள்ளிகளுடன் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ், மூன்றாமிடத்தை சென்னையை சேர்ந்த சிவன் ரோஷன் ஆகியோர் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, ரூ.2 லட்சம் மதிப்பிலான ரொக்கம், லேப்டாப், கோப்பைகள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.பரிசுகளை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் சரசுவதி, சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம் ஆகியோர் வழங்கினர்.தமிழ்நாடு மாநில செஸ் சங்க துணை தலைவர்கள் விஜயராகவன், ஆனந்தராம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி, கோவை மாவட்ட செஸ் சங்க தலைவர் செந்தில் சின்னசாமி, துணை தலைவர் இன்திகாப் அலாம், செயலாளர் தனசேகர், ஹாவே சாப்ட் நிறுவன இயக்குனர் விஜய் சங்கர், இந்துஸ்தான் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி