உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில கராத்தே போட்டி; கோவை மாணவர்கள் பதக்கம்

மாநில கராத்தே போட்டி; கோவை மாணவர்கள் பதக்கம்

கோவை : சென்னையில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில், கோவை மாணவர்கள் பல்வேறு பதக்கங்கள் வென்று தேசிய போட்டிக்கு தேர்வாகினர்.தமிழ்நாடு கராத்தே சங்கம் சார்பில், 4 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான 'சப் - ஜூனியர்' கராத்தே போட்டி, சென்னை வேல்ஸ் சர்வதேச பள்ளியில் நடந்தது.மாணவ - மாணவியருக்கு பல்வேறு எடைப்பிரிவுகளில் கட்டா மற்றும் குமிதே போட்டி நடத்தப்பட்டது. இதில், சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், கோவை மாவட்டம் சார்பில் பங்கேற்ற மாணவ - மாணவியர் ஏழு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் என, 13 பதக்கங்கள் வென்று அசத்தினர்.மேலும், தங்கம் வென்ற மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தமிழக அணி சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.வெற்றி பெற்ற மாணவர்களை கோவை மாவட்ட கராத்தே சங்கத்தின் தலைவர் மனோகரன், செயலாளர் முத்துராஜூ உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ