உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில டேக்வாண்டோ போட்டி; கோவைக்கு 24 பதக்கங்கள்

மாநில டேக்வாண்டோ போட்டி; கோவைக்கு 24 பதக்கங்கள்

கோவை : திருச்சியில் நடந்த தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில், கோவை மாவட்ட அணி 24 பதக்கங்கள் வென்றது. தமிழ்நாடு டேக்வாண்டோ மற்றும் திருச்சி ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ சங்கம் சார்பில், 35வது தமிழ்நாடு மாநில டேக்வாண்டோ போட்டி திருச்சியில் நடந்தது. இதில் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற, 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்று, பூம்சே மற்றும் சண்டை பிரிவில் போட்டியிட்டனர். இப்போட்டியில், கோவை சார்பில் பங்கேற்ற மாணவர்கள் 10 தங்கம் உட்பட 24 பதக்கங்கள் வென்றனர். கேடட் பிரிவில் இரண்டாமிடத்தையும், ஜூனியர் மாணவியர் பிரிவில் மூன்றாம் இடமும் பிடித்தது. சண்டை பிரிவில், மதுமிதா, அனன்யா சிங், அனுஷ்கா, நித்யஸ்ரீ, ஆருஷ், அர்ச்சனா, மணிகண்டன், தேஜாஸ்ரீ, அனிருத், கிருஷ்ணபிரகாஷ் ஆகியோர் தங்கம், கிருஷ்ணபிரகாஷ், இஜாஸ் சர்தார், ஆருஷ், அனுஷ்கா, தேஜாஸ்ரீ ஆகியோர் வெள்ளி, பிரஜோசா, அனுஹாசினி, அனுஷா, கோகுல்ராம், குழலினியன், சஞ்சய் தர்சன், ஜெயந்த், அமர்நாத், பிரிஜேஷ், தனேய்புனயா ஆகியோர் வெண்கலம் வென்றனர். பதக்கம் வென்ற மாணவர்களை, கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ சங்க தலைவர் லட்சுமணநாராயணன், செயலாளர் சிஜூகுமார், பொருளாளர் சுரேஷ் கனி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ