உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் அசத்தல்

அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் அசத்தல்

வால்பாறை;வால்பாறை திருஇருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சிக்கு, பள்ளி தாளாளர் சவுமியா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கவிதா வரவேற்றார்.கண்காட்சியை, பொள்ளாச்சி மகரிஷி இன்டர்நேசனல் பள்ளி தலைவர் ரவிசந்தர், தாளாளர் அழகேஸ்வரி, உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கவிப்பிரியா, திருஇருதய ஆலயபங்கு தந்தை ஜெகன்ஆண்டனி ஆகியோர் துவக்கி வைத்தனர்.கண்காட்சியில், இயற்கை பாதுகாப்பு, விவசாயத்தை பாதுகாப்பதன் அவசியம், வனவிலங்குகள் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, தமிழ்பண்பாடு உள்ளிட்ட பல்வேறு படைப்புக்களை வடிவமைத்து, மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.கண்காட்சியை, வால்பாறையில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர், பெற்றோர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை