உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன கண்ணாடிகள் உடைப்பு :டாக்ஸி டிரைவர்கள் கண்டனம்

வாகன கண்ணாடிகள் உடைப்பு :டாக்ஸி டிரைவர்கள் கண்டனம்

கோவை:கோவை, தெற்கு தாலுகா அலுவலகம் எதிரே ஊட்டி டாக்ஸி டிரைவர்களையும், போலீசாரையும் கண்டித்து, ரெட் டாக்ஸி டிரைவர்கள் சங்கத்தினர், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சங்க தலைவர் அருள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 'ஊட்டி டாக்ஸி டிரைவர்களுக்கு அங்குள்ள போலீசார், சாதகமாக செயல்படுவதை நிறுத்த வேண்டும்' என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பினர்.டாக்ஸி டிரைவர்கள் கூறுகையில், 'ஊட்டிக்கு சென்றால், அங்குள்ள டாக்ஸி டிரைவர்கள் எங்கள் வாகனங்களின்கண்ணாடியை உடைக்கின்றனர்.'வண்டியில் இருக்கும் ஸ்டிக்கர்களை கிழிக்கின்றனர். நாங்கள் புகார் அளித்தாலும், ஊட்டி போலீசார் கண்டுகொள்ளாமல், அவர்களுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். இதேபோல், பொள்ளாச்சியிலும் நடக்கிறது. இந்நடவடிக்கையை அங்குள்ள டிரைவர்களும், போலீசாரும் கைவிட வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை