உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதியார் பல்கலையில் தற்காலிக வேலைவாய்ப்பு 

பாரதியார் பல்கலையில் தற்காலிக வேலைவாய்ப்பு 

கோவை:கோவை பாரதியார் பல்கலையில், தொழில்நுட்ப உதவியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கெமிக்கல் சயின்ஸ், பயோலாஜிக்கல் சயின்ஸ், துறையில் தொழில்நுட்ப பிரிவில் தலா இரண்டு, ஆய்வக பிரிவில் தலா 2 பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். சப்போர்ட்டிங் ஸ்டாப் இருவர் உட்பட 10 தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஆக., 1ம் தேதி நிலவரப்படி, தொழில்நுட்ப பிரிவில் 28 வயதுக்கு உட்பட்டும், ஆய்வக, சப்போர்ட்டிங் பிரிவில் 25 வயதுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்குமான, ஊதிய விபரம், கல்வித்தகுதி விண்ணப்பிக்க வேண்டிய விதிமுறைகள், www.b-u.ac.inஎன்ற பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆக., 12.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை