உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரண்டு நடைமேம்பாலம் திட்டமிடுகிறது மாநகராட்சி

இரண்டு நடைமேம்பாலம் திட்டமிடுகிறது மாநகராட்சி

கோவை;பொதுமக்கள் ரோட்டை கடக்க, இரு இடங்களில் உயர் மட்ட பாலம் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.மேம்பாலம் கட்டியும் காந்திபுரம் பகுதியில், போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, மொபசல் பஸ் ஸ்டாண்ட்டுக்கு செல்ல, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ரோட்டை கடந்து செல்லமுடியாத சூழலே நிலவுகிறது. காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், முன்னர் உயர்மட்ட நடைமேம்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. மேம்பாலம் கட்டும் போது இது அகற்றப்பட்டது.தற்போது பொதுமக்கள் ரோட்டை கடக்க மீண்டும் இதேபோல், உயர்மட்ட நடைமேம்பாலம் கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதே போல், அரசு மருத்துவமனை முன்பும், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில்,''இரு இடங்களிலும் உயர்மட்ட நடை மேம்பாலம் அமைப்பது குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்படும். சாத்தியக்கூறுகள் இருந்தால் கட்டாயம் அமைக்கப்படும். குனியமுத்துார், மேட்டுப்பாளையம் ரோடுகளில் பயனற்று உள்ள உயர்மட்ட மேம்பாலங்கள் அகற்றப்பட்டு, இங்கு பயன்படுத்தப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி