உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குற்றங்கள் அதிகரிப்பு எதிரொலி :போலீஸ் சோதனை தீவிரம்

குற்றங்கள் அதிகரிப்பு எதிரொலி :போலீஸ் சோதனை தீவிரம்

கோவை:சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவரும் நிலையில் டாஸ்மாக் கடைகள், மாணவர்கள் விடுதி என, மாவட்டம் முழுவதும் திடீர் சோதனைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.கோவை மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டில் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், வால்பாறை, பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி என ஆறு 'சப் டிவிசன்'கள் உள்ளன. இவற்றின்கீழ், 38 ஸ்டேஷன்கள் உள்ள நிலையில் சமீபகாலமாக குற்றசம்வங்கள் அதிகரித்துவருகின்றன. அதற்கேற்ப ரோந்து, வாகன சோதனை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் அன்றாடம் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அரசியல் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதன் எதிரொலியாக, கோவை மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் சோதனைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று வாகன சோதனை, கல்லுாரி மாணவர்கள், வெளிமாநில பணியாளர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.மாவட்ட போலீசார் கூறியதாவது:மாவட்டம் முழுவதும், 45 இடங்களில் போலீசார் திடீர் சோதனையில் இன்று(நேற்று) ஈடுபட்டனர். 'டாஸ்மாக்' கடைகளில் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் பணிபுரிகின்றனர். இவர்களில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.இப்படி, 46 டாஸ்மாக் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. ஒத்தக்கால்மண்டபம், கோவில்பாளையம், மலுமிச்சம்பட்டி பகுதிகளில் மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில் சோதனை நடத்தப்பட்டது.வெளிமாநில தொழிலாளர்கள், வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கி பணிபுரியும் இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்களா எனவும் கண்காணித்துவருகிறோம். இந்நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி