மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
1 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
1 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
1 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
2 hour(s) ago
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் பிக் அப் வாகனத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் 2 வது பாலம் பகுதியை சேர்ந்தவர் ராமன், 20. இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். ராமனுக்கு சொந்தமாக, பிக் அப் வாகனம் உள்ளது. அதை வைத்து அவர் வாடகைக்கு ஒட்டி வருகிறார். கடந்த 19ம் தேதி, ராமன் வாடகைக்கு சென்று விட்டு, இரவு சுமார் 11 மணியளவில் ஊட்டி ரோடு, கவின் கார்டன் அருகே உள்ள தனியார் ஹோட்டல் எதிரில் உள்ள காலியிடத்தில், தனது வாகனத்தை நிறுத்தினார். பின் வீட்டுக்கு சாப்பிட்ட சென்றார். நள்ளிரவு வந்து பார்த்தபோது, ராமன் நிறுத்தி வைத்திருந்த இடத்திலிருந்து, பிக் அப் வாகனத்தை காணவில்லை. அக்கம் பக்கம் விசாரித்தும், நண்பர்களிடம் விசாரித்தும் எவ்வித தகவலும் இல்லை.இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ராமன், காணாமல் போன தனது வண்டியை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, வாகனம் காணாமல் போன இடத்திற்கு அருகில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.போலீசார் விசாரணையில் வாகனத்தை திருடியது குனியமுத்தூரை சேர்ந்த சடகாதுல்லாக், 46 என தெரியவந்தது. நேற்று முன் தினம் அவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து பிக் அப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.---
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago