உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டவர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டவர் கைது

கோவை:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சேர்ந்த காட்டுராஜா,44, தனது நண்பரான செந்தில் முருகனுடன், ஒண்டிப்புதுார் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். இவர்களை வழிமறித்து காமாட்சிபுரத்தை சேர்ந்த நித்தியானந்தன்,20, பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.காட்டுராஜா பணம்தர மறுத்ததால், மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி, காமாட்சிபுரத்தை சேர்ந்த ரவுடி கார்த்தியின் பெயரை கூறி, பணம் பறிக்க முயன்றுள்ளார். இருவரும் பிடிக்க முயன்றபோது நித்தியானந்தன் தப்பினார். காட்டுராஜா அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் நித்தியானந்தனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே பலவழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ