| ADDED : மே 23, 2024 11:15 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு முக்கிய பகுதிகளில், பழுதடைந்துள்ள கண்காணிப்பு கேமராவை சீரமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் நடக்கிறது. இதில், மொபைல்போன் மற்றும் நகை திருட்டு அதிகம் நடக்கிறது. இதை தவிர்க்க, ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.தற்போது, சில இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பழுதடைந்து தொங்கிய படி உள்ளன. சில இடங்களில் கேமரா இல்லாமல் உள்ளது. இதனால், கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதியில் ஏதேனும் திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்தால் குற்றவாளியை தேடிப்பிடிக்க போலீசாருக்கு சிரமம் ஏற்படலாம்.எனவே, பழுதடைந்த கண்காணிப்பு கேமராவை சீரமைக்க வேண்டும். மேம்பாலம் மற்றும் சர்வீஸ் ரோட்டில் கூடுதல் கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.