உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு!

கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு!

கோடை விடுமுறை என்றாலே பெரும்பாலான குழந்தைகளின் கைகளை மொபைல் போன்கள்தான் ஆக்கிரமித்திருக்கும். அவர்களை மீட்க, கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகள் சிறந்த சாய்ஸ்.

ஸ்ருஜனா ஸ்கூல் ஆப் பெர்பாமிங் ஆர்ட்ஸ்

பரதநாட்டியம், வாய்ப்பாட்டு உள்ளிட்ட பயிற்சிகள் நேரடி மற்றும் ஆன்லைன் மூலமாக கற்றுக் கொடுக்கப்படுகின்றன. முகவரி: பேரூர். தொடர்புக்கு: 90033- 76306, 93453- 78034.

வேதாத்திரி ஸ்கை யோகா

8 முதல் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, வரும் 30ம் தேதி வரை காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, பயிற்சி அளிக்கப்படுகிறது. 14 முதல் 23 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, மே 1 முதல் 5ம் தேதி வரை காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், யோகப் பயிற்சிகள், மூச்சுப்பயிற்சி, பண்பாட்டுப் பயிற்சி ஆகியன கற்றுத் தரப்படுகின்றன. முகவரி: உதகை ஸ்கை மனவளக்கலை யோகா தவ மையம், அப்பர் பஜார், ஊட்டி. தொடர்புக்கு: 94435- 60406, 94438- 65335.

கோவை மாவட்ட சைக்கிளிங் சங்கம்

இலவச சைக்கிளிங் பயிற்சி ஏப்., 28 முதல் வழங்கப்படுகிறது. முகவரி: சி.பி.எம். கல்லூரி அருகில், கோவைப்புதூர். தொடர்புக்கு: 98947- 89893, 95970- 45393.

நேரு கலை அறிவியல் கல்லூரி

இந்தியன் குக்கரி, சைனீஸ் குசைன், பிளவர் அரேஞ்ச்மென்ட், டவல் ஆர்ட் ஆகிய பயிற்சிகள் மே 2 முதல் 4ம் தேதி வரை அளிக்கப்படுகின்றன. முகவரி: திருமலையம்பாளையம். தொடர்புக்கு: 95666- 50755, 95666- 13833.

அருவங்காடு மனவளக் கலை மன்றம்

ஆசிரியர்களுக்கான தவதத்துவ விளக்கம், தவத்தின் அடிப்படை, ஆழம் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சிக் கட்டணம் 300 ரூபாய். முகவரி: அருவங்காடு அறிவுத் திருக்கோயில், ஜெகதளா சாலை. தொடர்புக்கு: 96774- 92413, 94435 -60406.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை