| ADDED : மார் 29, 2024 01:31 AM
கோவை:''எனது வேட்பு மனுவை நிராகரிக்க சரியான காரணங்கள் இல்லை; களத்தில் எதிர்க்க முடியாதவர்கள் வேட்பு மனு ட்ராமாவை கொண்டு வந்துள்ளனர்,'' என, கோவையில் அண்ணாமலை தெரிவித்தார்.கோவை காளப்பட்டியில் நடந்த இந்து முன்னணி கூட்டத்தில் பங்கேற்ற கோவை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை, நிருபர்களிடம் கூறியதாவது:அரசியல் கட்சிகள், நேரடியாக நம்மை களத்தில் எதிர்க்க முடியவில்லை என, வழக்கமான ட்ராமாவாக, வேட்புமனுவை கொண்டு வந்துள்ளனர். நாம் எப்போதுமே இரண்டு வேட்பு மனுக்களை சமர்ப்பிப்போம். இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டனர். களத்தில் எதிர்க்க முடியாதவர்கள், மனுவை ஏற்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது, அவர்களின் தோல்வி பயத்தைத் தான் காட்டுகிறது.வேட்பு மனுவை நிராகரிக்க, குறிப்பிட்ட காரணங்கள் இருக்க வேண்டும். சில திருத்தம் மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன. எனது விளக்கத்தை விபரமாக தெரிவித்து விட்டேன். மேலும் விவரம் தேவை என்றால், தேர்தல் நடத்தும் அதிகாரியை அணுகலாம்.இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.