கோவை:கவுமார மடாலயத்தில், குரு வணக்க நாள் விழா இன்று நடக்கிறது.இது குறித்து, கோவை கலைவாணி கல்வி நிறுவனங்களின் இணைத்தாளாளர் டாக்டர் குமாரசாமி கூறியதாவது:சரவணம்பட்டியிலுள்ள, கவுமார மடாலயத்தின் நான்காவது பட்டமாக பொறுப்பேற்றவர் குமரகுருபர சுவாமிகள் ஆன்மிகப் பணி மட்டுமின்றி சமூகப் பணிகள், கல்வி, இலக்கியம், சமய ஒற்றுமைக்காக கடந்த, 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.ஐ.நா.சபையில் உரையாற்றிய இந்தியாவின் முதல் சைவ ஆதினங்களில் ஒருவர் என்ற பெருமையும், குமரகுருபர சுவாமிகளுக்கு உண்டு. அவர்தம் அருளாசி பெறுவதற்காக, முதன்முறையாக குரு வணக்க நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த குருவணக்க நாள் விழா, வரும் ஞாயிறன்று(இன்று) மடாலய வளாகத்தில் நடைபெறுகிறது. அன்று காலை 7:00 மணி முதல் இரவு வரை, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் குருமுகூர்த்தத்துடன் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு குருபாதம் பணிந்து, அருளாசி பெறும் விழா நடக்கிறது. விழாவுக்கு, சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம் தலைமை தாங்குகிறார். கே.எம்.சி.எச்., தலைவர் நல்ல பழனிச்சாமி, சிறுதுளி அறங்காவலர் வனிதா மோகன், ராயல்கேர் மருத்துவமனை டாக்டர் மாதேஸ்வரன், குமரகுரு கல்லூரி தாளாளர் சங்கர் வாணவராயர், செந்தில் குழுமத் தலைவர் ஆறுமுகசாமி, கொங்குநாடு மருத்துவமனை தலைவர் டாக்டர் ராஜு, என்.ஜி. மருத்துவமனை தலைவர் டாக்டர் மனோகரன், ரூட்ஸ் நிறுவன தலைவர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.