உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்றைய மின்தடை நாளைக்கு ஒத்திவைப்பு

இன்றைய மின்தடை நாளைக்கு ஒத்திவைப்பு

கோவை:கவுண்டம்பாளையம், ஆர்.எஸ்.புரம், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ஒத்திவைக்கப்பட்டு, நாளை (10ம் தேதி) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மின்வாரிய செயற்பொறியாளர் (நகரியம்) பசுபதீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில், 9ம் தேதி செய்யப்படவிருந்த மின் தடை நிர்வாகக் காரணங்களால் மாற்றப்பட்டு, நாளை (10ம் தேதி) காலை 9:00 முதல் , மாலை 4:00 மணி வரை மின் தடை செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநகர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சிவதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆர்.எஸ்.புரம் துணை மின்நிலையத்தில் 9ம் தேதி மேற்கொள்ளப்படவிருந்த மாதாந்திர பராமரிப்பிற்கான மின்தடை ஒத்திவைக்கப்பட்டு, நாளை (10ம் தேதி) காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர் வைதீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 9ம் தேதி மேற்கொள்ளப்படவிருந்த மின்தடை, நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, நாளை (10ம் தேதி) காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை, மின்தடை செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை மாற்றப்பட்டுள்ளதால், இன்று வழக்கம்போல் மின் வினியோகம் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை