வரலாறு அறிவோம் கண்காட்சி
அறிவுத்திறன்களை மேம்படுத்தும் பழைய நாணயங்கள் கண்காட்சி, வடகோவையில் உள்ள,ஸ்ரீ குஜராத்தி சமாஜம் அரங்கில் நடைபெறவுள்ளது. காலை, 10:00 முதல் 6:00 மணி வரை நடக்கும் நிகழ்வுக்கு, பிள்ளைகளை அழைத்து செல்லலாமே. கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
நான்காண்டு கல்லுாரி படிப்பை முடித்து, சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கும் மாணவர்களுக்கு, பட்டமளிப்பு விழா, இன்று ஒத்தக்கால்மண்டபம் இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரியில் காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. திறன் மேம்பாட்டு பயிலரங்கம்
யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு, தயாராகும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம், கோவை மாவட்ட மைய நுாலகத்தில் நடைபெறவுள்ளது. காலை, 11:00 மணிக்கு துவங்கும் நிகழ்வில், ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். மகிழ்ச்சியான வகுப்பறை சூழல்
மதிப்பெண்கள் மட்டும் கல்வி அல்ல என்பதை வலியுறுத்தும் வகையில், 'மகிழ்ச்சியான வகுப்பறை சூழல்' என்ற பெயரில், அரசூர் கே.பி.ஆர்.கலைஅறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரியில், காலை, 9:30 மணிக்கு கருத்தரங்கு நடக்கிறது. சொற்பொழிவு
'தர்மத்தின் தனிமை தீர்ப்பான்' என்ற பெயரில், பி.எஸ்.ஜி., வானவில் அமைப்பு சார்பில், பீளமேடு பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சி மாலை, 6:00 மணியளவில் நடக்கவுள்ளது. முன்னதாக, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி மாணவர்களின் இசை நிகழ்ச்சி, 5:30 முதல் 6:00 மணி வரை நடக்கிறது. ரத்த தான விழிப்புணர்வு
'உதிரம் கொடுப்போம்; உயிரை காப்போம்' என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆனந்த சைதன்யா அமைப்பு சார்பில், நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை, 9:30 முதல் 1:30 மணி வரை ரத்த தான முகாம் நடக்கிறது. பொதுமக்கள் ரத்த தானம் அளிக்கலாம். குடிநோய் விழிப்புணர்வு முகாம்
மன உறுதியும், தொடர் சிகிச்சையும் இருந்தால், குடிநோய் பழக்கத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு விடலாம். இதற்கான விழிப்புணர்வு முகாம், போத்தனுார் புனித ஜோசப் சர்ச்சில், இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை நடக்கிறது. ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி, பேரூர் மெயின் ரோடு, கோவைப்புதுார் பாரத் பெட்ரோல் பங்க் அருகில், இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு சார்பில் நடத்தப்படுகிறது.