உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

இசை நிகழ்ச்சி

இசைப்பிரியர்களின் இசை தாகத்திற்கான அற்புத விருந்து. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், பிரபல பாடகி சுதா ரகுநாதனின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், கிக்கானி மேல்நிலைப்பள்ளியில், மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது.

நுால் வெளியீட்டு விழா

அபயம் பப்ளிஷர்ஸ் சார்பில், சுவாமி மணிசங்கரானந்தா எழுதிய 'ஜீவன்முக்தி விவேகம்' நுால் வெளியீட்டு விழா நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட்டில், மாலை, 5:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை நடக்கிறது.

திருக்குறள் பயிலரங்கு

திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், 'திருக்குறள் பார்வையில் உறவுகளின் நன்மையும் வலிமையும்' என்ற தலைப்பில், பயிலரங்கு நடக்கிறது. பூ மார்க்கெட், தேவாங்கப்பேட்டை வீதியில், சுவாமி விவேகானந்தர் இல்லப்பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது.

'ஆய்தம்' கருத்தரங்கு

கே.பி.ஆர்., கலை மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக் கல்லுாரி சார்பில், 'உடற்கல்வித்துறை, உலக மற்றும் இந்திய களரிக் கூட்டமைப்பு இணைந்து 'ஆய்தம்' என்ற தலைப்பில், இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கை நடத்துகின்றன. கல்லுாரி வளாகத்தில், மதியம், 2:00 மணி முதல் கருத்தரங்கு நடக்கிறது.

பட்டமளிப்பு விழா

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லுாரியில், பட்டமளிப்பு விழா நடக்கிறது. கல்லுாரி வளாகத்தில், காலை, 9:30 மணிக்கு, விழா துவங்குகிறது. வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

வைரவிழா மலர் வெளியீடு

வெள்ளலுார் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் வைர விழாக்குழு சார்பில், வைரவிழா மலர் வெளியீட்டு விழா மற்றும் நுழைவுவாயில் திறப்பு விழா நடக்கிறது. பள்ளி வளாகத்தில், காலை, 10:00 மணிக்கு விழா துவங்குகிறது.

நிர்வாகிகள் பதவியேற்பு

ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்துார் மான்செஸ்டர் சங்கத்தின், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடக்கிறது. அவிநாசி ரோடு, தி கிராண்ட் ரீஜென்டில், மாலை, 6:06 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது.

இலக்கிய பேரவை

கோவை மாவட்டப் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில், இலக்கிய சந்திப்பு நடக்கிறது. இதில், பேரூர் நடராசனின் 85வது பிறந்தநாள் விழா நடக்கிறது. போத்தனுார், தென்னக ரயில்வே இன்ஸ்டிடியூட்டில், காலை, 10:25 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.

அரங்கேற்ற விழா

அக்கரை செங்கப்பள்ளி அருகே, கரியகாளியம்மன் கோவிலில் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடக்கிறது. ஸ்ரீ கரியகாளியம்மன் வள்ளி கும்மி கலைக்குழுவினர் மாபெரும் அரங்கேற்றத்தை, மாலை, 6:00 மணிக்கு நிகழ்த்துகின்றனர்.

விதைப்பந்து துாவுதல்

வாகை சமூகநல மையம், மக்கள் நல சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளை சார்பில், விதைப்பந்து துாவும் நிகழ்வு நடக்கிறது. கோவில்பாளையம், காட்டம்பட்டி குளத்தில் காலை, 10:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.

இயற்கை வாழ்வியல்

கோவை இயற்கை நலச்சங்கம் சார்பில், இயற்கை வாழ்வியல் விழிப்புணர்வுகூட்டம் நடக்கிறது. அவிநாசி ரோடு, அண்ணா சிலை எதிரே, டி.கே.பி., சேம்பரில், காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இதில், 'மனோபலமும் இயற்கையும்' என்ற தலைப்பில் சிறப்புரை நடக்கிறது.

கலிக்கம் சிகிச்சை முகாம்

வள்ளலார் வைத்தியசாலை மற்றும் திருவடி சமரச சுத்த சத்திய சன்மார்க்க சபை சார்பில், இலவச கண், காது மூக்கு கலிக்கம் முகாம் நடக்கிறது. அன்னுார், தென்னம்பாளையம் ரோட்டில், காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை முகாம் நடக்கிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை