கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பகுதியில் கோடை வெயிலால் தக்காளி சாகுபடி பாதித்து, வரத்து குறைந்துள்ளது.கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பெரும்பாலும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தக்காளிக்கு அடுத்ததாக பிற வகை காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.தற்போது, கோடை வெயில் அதிகரிப்பால் கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி சாகுபடி பாதித்துள்ளது. இதனால், விற்பனைக்கு தக்காளி வரத்து குறைந்து வருகிறது.மேலும், விலையும் உயராததால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவதை ஒரு மாதம் காலம் தற்காலிகமாக தவிர்த்துள்ளனர்.ஒரு சில விவசாயிகள் மட்டும் தக்காளி பயிரிடுகின்றனர். ஆனாலும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் போதிய அளவு மகசூல் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'கோடை வெயில் அதிகரிப்பால், தக்காளி விளைச்சல் பாதித்துள்ளது. மேலும், போதிய அளவு தண்ணீரும் இல்லாததால், தக்காளி செடி வாடியுள்ளது. எனவே, பெரும்பாலான விவசாயிகள் ஏப்ரல் மாத கடைசியில் தக்காளி பயிரிட திட்டமிட்டுள்ளனர். அதுவரை பெரும்பாலான இடங்களில் கோடை உழவு மட்டும் செய்யப்படுகிறது,' என்றனர்.உடுமலை, ஏப். 1- மண் மூடாக்கு அமைக்க விவசாயிகளுக்கு அறிவுரை
நீர் பாசனம் குறைந்தளவு உள்ள இடங்களில், மண் மூடாக்கு அமைக்க வேண்டும். கோடைக்காலத்தில் பெறப்படும் மழைநீரை, வேர் பகுதியில் சேமித்து, மரத்தை சுற்றிலும் பாத்தியை, உள்நோக்கி சாய்வாக ஆழப்படுத்த வேண்டும்.பகல் நேர வெப்பநிலை உயர்ந்து காணப்படுவதால், கால்நடை மற்றும் கோழிகளுக்கு போதுமான அளவு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும், கால்நடை குடில்களை சுற்றிலும் ஈரமான சாக்குகளை தொங்க விட வேண்டும்.கால்நடைகளை வெயில் நேரத்தில் மேய்ச்சலுக்கு விட வேண்டாம்.இத்தகவலை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், இந்திய வானிலைத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள, திருப்பூர் மாவட்டத்தின் வாரந்திர காலநிலை நிலவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.