கோவை:கோவை பீளமேடு ரயில்வே ஸ்டேஷனில் பொறியியல் மற்றும் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், நாளை (7ம் தேதி), நாளை மறுதினம் (8ம் தேதி) மற்றும், 10ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.* ரயில் எண்: 16159 சென்னை எழும்பூர் -- மங்களூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், இருகூர், போத்தனுார் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் பீளமேடு, வடகோவை மற்றும் கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லாது.* வரும், 7ம் தேதி கோவை வழியாக இயக்க வேண்டிய பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 22644), இருகூர், போத்தனுார் வழியாக இயக்கப்படும். கோவை சந்திப்புக்கு பதிலாக போத்தனுார் சந்திப்பில் நின்று செல்லும்.* கோவை வழியாக இயக்கப்படும் (எண்: 22504) திப்ருகர் -- கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ், புதுடில்லி -- திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் (எண்: 12626), பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்: 12677), 7, 8, 10ம் தேதிகளில் போத்தனுார் வழியாக இயக்கப்படும். சில்சார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (எண்: 12508), 7ம் தேதி போத்தனுார் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்கள் போத்தனுாரில் நின்று செல்லும்.* ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் (எண்: 13352), போத்தனுார், இருகூர் வழியாக இயக்கப்படும். கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லாது; போத்தனுாரில் நின்று செல்லும். போத்தனுாருக்கு, 7ம் தேதி (ஞாயிறு) மதியம், 12:15 மணிக்கு வந்தடையும்; 12:20 மணிக்கு புறப்படும்.* ஈரோடு -- கோவை வரை இயக்கப்படும் ரயில் (எண்: 06801), 7, 8, 10ம் தேதிகளில், ஈரோட்டில் 7:50 மணிக்கு புறப்படும்; இருகூரில் குறுகிய நேரம் நிறுத்தப்படும். இருகூரில் இருந்து கோவை சந்திப்புக்கு ரயில் இயக்கப்படாது.* கோவை - ஷொரனுார் ரயில் (எண்: 06805), வழக்கமாக கோவை சந்திப்பில் மதியம், 11:55 மணிக்கு புறப்படும். அதற்கு பதிலாக, போத்தனுாரில் இருந்து, மதியம் 12:05 மணிக்கு புறப்படும் என, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.