உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோருக்கு பயிற்சி முகாம்

ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோருக்கு பயிற்சி முகாம்

கோவை;'ஆட்டிசம்' குழந்தைகளின் பெற்றோருக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம், வரும் 31ம் தேதி குஜராத்தி சமாஜ் அரங்கில் நடக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் ஏப்., 2ம் தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 'சாரதி பேமேக்' அமைப்பு, கோவையில் உள்ள அறிவுசார் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு, பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில், 'ஆட்டிசம்' குழந்தைகளின் பெற்றோருக்கு, எஸ்2சி (ஸ்பெல்லிங் டூ கம்யூனிகேட்) என்ற பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் ஞாயிறு காலை 10:30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரோட்டில், குஜராத்தி சமாஜத்தில் உள்ள மேத்தா ஹாலில் நடக்கிறது. இதில், ஆட்டிசம் அண்ட் பியாண்ட் தாளாளர் தீபா மாலினி உரையாற்றுகிறார். தொடர்புக்கு 94434 79147.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ