உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலை மாணவர்கள் திறன் மேம்பாட்டுக்கு பயிற்சி

வேளாண் பல்கலை மாணவர்கள் திறன் மேம்பாட்டுக்கு பயிற்சி

கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், மாணவர்களின் திறனை மேம்படுத்த புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை, துணைவேந்தர் கீதாலட்சுமிதுவக்கிவைத்தார்.இத்திட்டத்தின கீழ், வேளாண் தொழில்துறை சார்ந்த வல்லுநர்கள் தேர்வு செய்து, மாணவர்களுக்கு அவர்களது அனுபவங்கள் வாயிலாக, தொழில்முனைவோர் திறன் மேம்படுத்தவுள்ளனர்.ஆண்டுக்கு, ஐந்துஅல்லது ஆறு முறை, வல்லுநர்கள் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுக்கவுள்ளனர். வேளாண் பல்கலை சார்பில், 72 நிபுணர்கள் மாணவர்களுடன் கலந்துரையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.முதல் நாளில், பூச்சியியல் துறை மாணவர்களுக்கு தேனீ சார்ந்த வளர்ப்பு, விற்பனை, பூச்சி மேலாண்மை, பாதுகாப்பு நடைமுறை, தேன் சேகரிப்பு, தேனடை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்துதெளிவுபடுத்தப்பட்டது.இந்நிகழ்வில், முதுநிலை கல்வித்துறை தலைவர் செந்தில், பூச்சியியல் துறை தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை