உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையில் மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சாலையில் மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மேட்டுப்பாளைம்;காரமடை - தோலம்பாளையம் சாலையில் மழையினால், மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாகவே இரவு நேரங்களில் லேசாக மற்றும் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. இதனால் தோலம்பாளையம் - காரமடை சாலையில், தெப்பக்குளம் அருகே மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தது. இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.உடனடியாக காரமடை போலீசார் மற்றும் பொதுமக்கள் மரக்கிளையை அப்புறப்படுத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ