உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்ஜி., மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கே.சி.டி.,க்கு கோப்பை  

இன்ஜி., மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கே.சி.டி.,க்கு கோப்பை  

கோவை : இன்ஜி., கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கிரிக்கெட் இறுதிப்போட்டியில், ஸ்ரீ சக்தி கல்லுாரி அணியை வீழ்த்தி, குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி, கோப்பையை வென்றது.வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியின் உடற்கல்வித்துறை மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், 4ம் ஆண்டு எஸ்.ஆர்.இ.சி., அலுமினி கிரிக்கெட் போட்டி கல்லுாரி வளாகத்தில் நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன. இதன் இறுதிப்போட்டியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி 58 ரன்கள் வித்தியாசத்தில், ஸ்ரீ சக்தி கல்லுாரி அணியை வீழ்த்தி, முதலிடம் பிடித்தது. மூன்றாமிடத்துக்கான போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி முன்னாள் மாணவர்கள் அணி, 84 ரன்கள் வித்தியாசத்தில், சி.ஐ.டி., கல்லுாரி அணியை வீழ்த்தியது. வெற்றி பெற்ற அணியினருக்கு, ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி முன்னாள் மாணவர் நாராயணன், முன்னாள் உடற்கல்வி இயக்குனர் முரளி கிருஷ்ணன், முதல்வர் சவுந்தர்ராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை