உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நடிகை வீட்டில் திருட்டு: இரு பெண்கள் கைது

நடிகை வீட்டில் திருட்டு: இரு பெண்கள் கைது

வடவள்ளி;வடவள்ளியில் உள்ள நடிகையின் வீட்டில், பணம் மற்றும் பாஸ்போர்ட் திருடிய இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.கோவையை சேர்ந்தவர், தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை அதுல்யா ரவி, தந்தை ரவி மற்றும் தாய் விஜயலட்சுமி, வடவள்ளியில் உள்ள மருதம் நகரில் வசித்து வருகின்றனர். இங்கு குளத்துப்பாளையத்தை சேர்ந்த செல்வி,46 என்ற பெண், வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், வேலைக்கு வந்த செல்வி, அவரது தோழி சுபாஷிணியுடன் சேர்ந்து, பீரோவில் இருந்த 2,000 ரூபாய் மற்றும் பாஸ்போர்ட்டை திருடி சென்று விட்டதாக, விஜயலட்சுமி வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்வி மற்றும் சுபாஷிணியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி