உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மந்தை மாரியம்மன் கோவிலில் வள்ளிக்கும்மி

மந்தை மாரியம்மன் கோவிலில் வள்ளிக்கும்மி

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே மந்தை மாரியம்மன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடந்தது.மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, ஜடையம்பாளையம் புதூரில் மந்தை மாரியம்மன் கோவில் உள்ளது.இந்த கிராமத்தைச் சேர்ந்த, ஐந்து வயதிலிருந்து, அறுபது வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், ஆண்கள், பெண்கள் என, 50க்கும் மேற்பட்டவர்கள், 15 வகையான வள்ளிக் கும்மி கிராமிய நடனக் கலைகளை கற்றனர். இவர்களுக்கு கிராமிய கலைக்குழு ஆசிரியர் முருகையன் தலைமையில் குழுவினர், வள்ளி கும்மி நடனத்தை கற்றுக் கொடுத்தனர். மந்தை மாரியம்மன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா ஜடையம்பாளையம் புதூரில் நடைபெற்றது. விழாவுக்கு ஊர் கவுடர் பார்த்திபன் தலைமை வகித்தார். ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி விழாவை துவக்கி வைத்தார். இரண்டு மணி நேரம் கலைஞர்கள் நடனம் ஆடினர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஒன்றிய கவுன்சிலர் சண்முகசுந்தரம், வார்டு உறுப்பினர் பத்திரசாமி,சிவக்குமார், கோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி