உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மினி பஸ் இயக்க வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்

மினி பஸ் இயக்க வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்

அன்னுார்;பத்தாண்டுகளாக இயங்கி வந்த மினி பஸ், இயக்கப்படாததால், கிராம மக்கள் தவிக்கின்றனர். அன்னுார் அருகே உள்ள ஆதவன் நகர், ஒட்டர்பாளையம், ஆயிக்கவுண்டர் புதுார், பூலுவபாளையம், உள்ளிட்ட 10 கிராமங்கள் வழியாக, அழகே பாளையத்திற்கு 10 ஆண்டுகளாக மினி பஸ் இயங்கி வந்தது.கிராமப்புறத்தை சேர்ந்த மாணவ, மாணவியர், அன்னுார், மூக்கனுார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், அன்னுாரில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும் செல்ல மினி பஸ் உபயோகமாக இருந்தது.மேலும் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியோர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக மினி பஸ் இயங்கவில்லை.இது குறித்து ஒட்டர்பாளையம் மக்கள் கூறுகையில், 'மினி பஸ் இயங்காததால் எட்டு கிராம மக்கள் தவித்து வருகிறோம். மினி பஸ் நிர்வாகத்தினரிடம் கேட்டபோது டீசல் விலை, ஆள் சம்பளம் ஆகியவற்றுக்கு கூட வசூல் ஆவது இல்லை, தினமும் நஷ்டம் ஆகிறது, என்று கூறுகின்றனர். அரசு இதே வழித்தடத்தில் மீண்டும் மினி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நான்கு கி.மீ., துாரம் நடந்து மாணவ, மாணவியர் பள்ளிக்கு செல்கின்றனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ