உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இறகுப்பந்து போட்டி: மாணவர்கள் அசத்தல்

இறகுப்பந்து போட்டி: மாணவர்கள் அசத்தல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே, மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி கடந்த, இரு நாட்களாக, பொள்ளாச்சி திஷா பள்ளியில் நடந்தது. போட்டியானது, 14, 17 மற்றும், 19வயது என மூன்று பிரிவுகளாக நடந்தது.தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்து, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இரட்டையர் மற்றும் ஒற்றையர் பிரிவு என, இரு பிரிவுகளாக நடைபெற்றது.இறுதி போட்டியில், 19வயது உட்பட்டோருக்கான இரட்டையர் பிரிவில், மதுரை லக் ஷ்மி பள்ளி முதலிடமும், பொள்ளாச்சி திஷா பள்ளி இரண்டாம் இடமும் பிடித்தது. அதே போல ஒற்றையர் பிரிவில் மதுரை லக் ஷ்மி பள்ளி முதல் இடத்தையும், கோவை கவ்மரம் சுசீலா பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தது.மேலும், 14, 17 வயதினருக்கு உட்பட்ட போட்டிகளில் ஒற்றை மற்றும் இரட்டை பிரிவினர் பங்கேற்கும் போட்டிகளில் சென்னை, கோத்தகிரி, சிவகாசி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வந்த போட்டியாளர்கள் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது. தற்போது முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளதாக, போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை