உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் பாறாங்கல்லை வைத்தோருக்கு எச்சரிக்கை

ரோட்டில் பாறாங்கல்லை வைத்தோருக்கு எச்சரிக்கை

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, சங்கராயபுரம் ரோட்டில் டிப்பர் லாரிகள் செல்ல கூடாது என, அப்பகுதி மக்கள் சிலர் ரோட்டில் பாறாங்கல்லை வைத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிணத்துக்கடவு, நெ.10 முத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கராயபுரம் செல்லும் ரோட்டில், கனிமவள கற்கள் ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகள் சென்று வருவதால், பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறு ஏற்படுகிறது.இந்த ரோடு சேதம் அடையும் என்பதால், அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ரோட்டில் டிப்பர் லாரிகள் செல்லக்கூடாது என்பதற்காக, இரவு நேரத்தில் ரோட்டின் ஒரு பகுதியில் பெரிய பாறாங்கல்லை வைத்தனர்.இதனால், இந்த ரோட்டில் டிப்பர் லாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதி மக்களிடையே விசாரித்து பொக்லைன் வாகனம் வாயிலாக கல்லை உடனடியாக அகற்றினர்.மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அப்பகுதியில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி