உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள கிணறுகளில் இருந்து, தண்ணீர் எடுக்க அனுமதிக்க கோரி, தனியார் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி நகரில் உள்ள தனியார் கிணற்றில் இருந்து, டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர். வறட்சியான கால கட்டத்தில், தண்ணீர் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் என, ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பொள்ளாச்சி மரப்பேட்டை, கோட்டூர் ரோடு பகுதிகளில், கிணறு, போர்வெல்களில் இருந்து நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், ஆழியாறு ஆற்றுப்படுகையில் உள்ள கிணறுகளில் இருந்து அத்துமீறி தண்ணீர் எடுத்து, டேங்கர் லாரிகளில் கொண்டு சென்று விற்பனை செய்ததை, அதிகாரிகள் கண்டுபிடித்தனர். நிலத்தடி நீரை உறிஞ்ச வேண்டாம் என, நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், தண்ணீர் லாரி உரிமையாளர்கள், ஊஞ்சவேலாம்பட்டியில் லாரிகளை நிறுத்தி, நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.வருவாய்துறை அதிகாரிகள், நகரப்பகுதியில் தண்ணீர் எடுக்க அனுமதிக்க வேண்டும். தண்ணீர் எடுத்து சென்று, விவசாயிகளுக்கு தான் வினியோகம் செய்கிறோம். இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், தொடர் போராட்டம் நடைபெறும் என, தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை