உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எங்களை தேர்வு செய்தால் அனைத்தையும் செய்வோம் : நாம் தமிழர் வேட்பாளர் பேட்டி

எங்களை தேர்வு செய்தால் அனைத்தையும் செய்வோம் : நாம் தமிழர் வேட்பாளர் பேட்டி

கோவை;எங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் எங்களை தேர்வு செய்து ஆட்சிப்பீடத்தில் அமர்த்தினால் அனைத்தையும் செய்வோம்,'' என கோவை லோக்சபா தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் கூறினார்.அவர் கூறியதாவது:நாங்கள் இன்னும் ஆட்சியில் அமரவில்லை. கோவையின் தேவைக்காக லோக்சபாவில், கட்டாயம் குரல் கொடுப்பேன். எம்.பி., யாக மக்கள் என்னை தேர்வு செய்தால், கோவைக்கான அடிப்படை ரயில் தேவைகள் குறித்து நிபுணர்களுடன் ஆலோசிப்பேன். அதன் அடிப்படையில் தேவைகளை நிறைவேற்ற என்னால் முடிந்ததை செய்வேன்.ஜி.எஸ்.டி., மாற்றம் குறித்து தொடர்ந்து கருத்துக்கள் எழுப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசு இதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் மட்டும் தனியாக இதற்கு எதுவும் செய்து விட முடியாது.அனைவரும் இணைந்து தான் போராட வேண்டும்.நான் எம்.பி., யாக ஆனால், மட்டுமே இதுகுறித்து பேச முடியும். மக்கள் எங்களை அதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும்.நம்மிடமே தொழில் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. அப்படி இருக்கும் போது எதற்காக வெளி நாடுகளுக்கு சென்று அங்கு நடத்தப்படும் கண்காட்சிகளை பார்க்க வேண்டும். ஜி.எஸ்.டி., உள்ளிட்ட இடர்களை அகற்றினாலே தொழில் வளர்ச்சி எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்.பஞ்சாலைகள் மூடப்படுவதற்கு யார் காரணம். லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த பஞ்சாலைகளை மூடியது யார். எதனால் மூடப்பட்டது என்பதை யோசிக்க வேண்டும். மத்திய அரசு தான் இதற்கு முழுக்க காரணம். பல மில்கள் நல்ல நிலையில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனும் கோவையில், பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதை மீண்டும் திறக்க முயற்சி செய்வேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் எங்களை தேர்வு செய்து ஆட்சிப்பீடத்தில் அமர்த்தினால் அனைத்தையும் செய்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

vijay
ஏப் 17, 2024 13:27

அம்மா தாயே, இது சட்டமன்ற தேர்தல் இல்லை நாடாளுமன்ற தேர்தல் இடங்களிலும் ஜெயித்தாலும், உங்கள் கட்சியால் ஆட்சி பீடத்தில் அமரமுடியாது தீயமுக அதிமுகாவாலயே நாட்டை ஆளமுடியாது இதை உங்கள் அதிபரிடம் சொல்லுங்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை