உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தகவல் அறியும் மனுக்கள் நிலுவை ஏன்? மாநில தகவல் ஆணையர் விசாரணை

தகவல் அறியும் மனுக்கள் நிலுவை ஏன்? மாநில தகவல் ஆணையர் விசாரணை

கோவை : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரப்பட்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் மீது, கோவையில் மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் நேற்று விசாரணை நடத்தினார். தகவல் அறியும் உரிமை சட்டம் கீழ், கோரப்பட்ட தகவல்கள் மூலம் பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.இதன் காரணமாக, சமீபகாலமாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதிலளிக்க அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்; தகவல் கோரும் மனுக்களை கிடப்பில் போடுகின்றனர்.மேல்முறையீடு செய்தாலும், இழுத்தடிக்கப்படுகிறது. அதன்பின், மாநில ஆணையர் முன்னிலையில் விசாரணை நடத்தி, தகவல் அளிக்கப்படுகிறது. அப்போதும் தகவல் வழங்காத பட்சத்தில், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு, தகவல் ஆணையம் அபராதம் விதிக்கிறது.இவ்வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மாவட்ட கருவூலகம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்டம் ஆகிய மூன்று துறைகளில் மட்டும், 60 மனுக்களுக்கு நீண்ட நாட்களாக தகவல் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தன.இவற்றின் மீதான விசாரணை, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள், மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் முன் ஆஜராகினர்.அப்போது, அரசு போக்குவரத்து கழக டிரைவர் தண்டபாணி என்பவர், 'திருப்பூர் முதல் கோவை வரை பல்லடம் வழியாக இயக்கப்படும், ஐந்து அரசு பஸ்களின் நேரத்தை, போக்குவரத்து கழக உயரதிகாரிகள் வருவாய் இல்லாத நேரத்துக்கு, தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றியுள்ளனர்.அரசுக்கு ஒரு மாதத்துக்கு, ஒரு லட்சத்து, 95 ஆயிரத்து, 850 ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற பிரிவுக்கு, மனு அனுப்பியிருந்தார். இம்மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டிருந்தார். இதற்கு அரசு போக்குவரத்து கழக உயரதிகாரிகள் பதில் அளிக்காததால், மாநில தகவல் ஆணையர் முன்னிலையில், நேற்று விசாரணை நடத்தப்பட்டது.அரசு போக்குவரத்து கழகத்தில் குழு அமைத்து விசாரித்து, இம்மனுவுக்கு பதிலறிக்கையை, மாநில தகவல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.திருப்பூர் முதல் கோவை வரை பல்லடம் வழியாக இயக்கப்படும், ஐந்து அரசு பஸ்களின் நேரத்தை, போக்குவரத்து கழக உயரதிகாரிகள் வருவாய் இல்லாத நேரத்துக்கு, தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றியுள்ளனர். அரசுக்கு ஒரு மாதத்துக்கு, ஒரு லட்சத்து, 95 ஆயிரத்து, 850 ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை