உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குட்டியுடன் உலா வந்த காட்டு யானைகள்

குட்டியுடன் உலா வந்த காட்டு யானைகள்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே மொக்கை மேடு கிராமத்தில், உலா வந்த 3 காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது மொக்கை மேடு கிராமம். இப்பகுதி நெல்லி மலை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு, நேற்று முன் தினம் இரவு அடர்ந்த வனப்பகுதியில் இருந்து, குட்டியுடன் இரண்டு காட்டு யானைகள் வெளியேறின. இரவு முழுவதும் மொக்கை மேடு கிராமத்தில் உள்ள வனப்பகுதியோரம் உலா வந்தது. பின் அங்கேயே முகாமிட்டது. இதையடுத்து, நேற்று காலை அப்பகுதி மக்கள் காட்டு யானை நடமாட்டம் குறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று, காட்டு யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை