உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நள்ளிரவில் குடிசையை பிரித்து எறிந்த காட்டு யானைகள்

நள்ளிரவில் குடிசையை பிரித்து எறிந்த காட்டு யானைகள்

பெ.நா.பாளையம் : சின்னதடாகம் அருகே நள்ளிரவில் குடிசையை பிரித்து எறிந்த யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை வடக்கு, சின்னதடாகம் வட்டாரத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யானைகளை கட்டுப்படுத்த, வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறையினர் பணியில் ஈடுபட்டாலும், யானைகளின் வரவை முழுமையாக அவர்களால், கட்டுப்படுத்த இயலவில்லை.நேற்று முன்தினம் இரவு, சின்ன தடாகம் தண்ணீர் பந்தல் அருகே சவுடாம்பிகா நகரில் கட்டுமான பணியாளர்கள் தங்கி இருந்த குடிசை வீட்டை, நள்ளிரவில் காட்டு யானைகள் பிரித்து எறிந்தன. குடிசை வீட்டுக்குள் இருந்த நான்கு பேர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இது குறித்து, சின்னதடாகம் வட்டார விவசாயிகள் கூறுகையில்,' வனவிலங்குகளின் பிரச்னைகளுக்கு இதுவரை நிரந்தர தீர்வு இல்லை. காட்டு யானைகளை 'ட்ரோன்' வாயிலாக கண்காணித்து, விரட்டும் பணியில் தொண்டாமுத்தூர் பகுதிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று சின்னதடாகம் வட்டாரத்திலும், ட்ரோன் வாயிலாக, காட்டு யானைகளை கண்காணித்து விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட வேண்டும். மேலும், யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் அதிக நபர்களை ஈடுபடுத்த முன்வர வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை