மேலும் செய்திகள்
உண்ணி சொட்டு மருந்து வழங்க கால்நடைத்துறை செயல்விளக்கம்
4 hour(s) ago
அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம்
4 hour(s) ago
தொடர் விடுமுறை எதிரொலி; சுற்றுலா பயணியர் குதுாகலம்
4 hour(s) ago
இன்று இனிதாக பொள்ளாச்சி
4 hour(s) ago
பொள்ளாச்சி : கோடை விடுமுறைக்குப் பின், ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வு, இம்மாதம் 2ம் தேதி துவங்கியது. அதில், ஒன்று முதல் 3ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.தொடர்ந்து, நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று, நான்கு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:பொதுவாக கோடை விடுமுறைக்குப் பின், ஜூன் ஒன்றாம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும். 1ம் தேதி சனிக்கிழமை என்பதால், 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல, ஜூன் 4-ம் தேதி லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அப்பணியிலும் ஆசிரியர்கள் ஈடுபடுவர் என்பதால் முதல் வாரம் வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கான தகவல் அதிகாரப் பூர்வமாக பள்ளிகளுக்கு கிடைக்கப் பெறவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago