உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபத்து அபாயம் தவிர்க்க தடுப்பு அமைக்கப்படுமா?

விபத்து அபாயம் தவிர்க்க தடுப்பு அமைக்கப்படுமா?

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, வடசித்தூரில் உள்ள நீரோடை பாலத்தில் தடுப்பு அமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு, வடசித்தூர் - பனப்பட்டி ரோட்டில் அதிக வாகன போக்குவரத்து உள்ளது. இந்த வழித்தடத்தில் குறுக்கிடும் நீரோடையை கடக்க தரைமட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் தடுப்பு இல்லாததால், வாகனங்கள் ஓடையில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.மேலும், ரோட்டில் வளைவு பகுதிகள் அதிகம் உள்ளது. மான்கள் நடமாட்டமும் உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் இரவு நேரத்தில் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி, நீரோடை பாலத்தில் தடுப்பு அமைத்து, சோலார் மின் விளக்குகள் பொருத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை