உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கனவு இல்லம் திட்டத்தில் 12 பேருக்கு பணி உத்தரவு

கனவு இல்லம் திட்டத்தில் 12 பேருக்கு பணி உத்தரவு

அன்னுார் : பசூர் ஊராட்சியில், 12 பேருக்கு, கனவு இல்லம் திட்டத்தில் புதிய வீட்டுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தமிழக அரசு நடப்பாண்டில், கனவு இல்லம் திட்டத்தில், தலா 360 சதுரடி அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட, தலா 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தது.இதற்கென சில மாதங்களுக்கு முன் குடிசை வீடுகள், தகர சீட்டு வீடுகள் கணக்கெடுக்கப்பட்டன. சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். கணக்கெடுப்பில் விடுபட்டவர்களுக்கு, கடந்த 22ம் தேதி இரண்டாவது முறையாக சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஒன்றிய மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பசூர் ஊராட்சியில், பசூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 12 பேருக்கு புதிதாக வீடு கட்ட, நேற்று ஊராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பணி உத்தரவு வழங்கப்பட்டது.இத்துடன் சிறிய பழுது மற்றும் பெரிய அளவிலான பழுது பார்க்க 2001ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சாய்தள வீடு மற்றும் கான்கிரீட் வீட்டு உரிமையாளர்கள் 45 பேருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் வித்யா சுகுமார், பணி உத்தரவை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை