உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயக பெருமானுக்கு வழிபாடு

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயக பெருமானுக்கு வழிபாடு

- நிருபர் குழு -பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தியாக வழிபாடு நடத்தப்படுகிறது. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் கோவிலில் நடக்கிறது.பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில் ஆறாம் ஆண்டு வருஷாபிேஷக விழா மற்றும் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. நேற்றுமுன்தினம் மங்கள இசை, அனுக்ஞை, கலச ஆவாஹனம், பஞ்சகவ்ய பூஜை, பாராயணம், பூர்ணாஹுதி பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை, பஞ்சகவ்ய பூஜை, மூலமந்திர ஜெபம், பாராணயம், பூர்ணாஹுதி, கலசாபிேஷகம், சோடச அபிேஷகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து, சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நேற்று மாலை நடைபெற்றன. சுவாமி திருவீதி உலா, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.சேரன் தொழிலாளர் காலனி செல்வ விநாயகர் கோவிலில் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.* உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சுவாமிகளுக்கு பால், பன்னீர், உள்ளிட்ட திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன், விநாயகருக்கு, தீபாராதனை நடந்தது.உடுமலை வ.உ.சி., வீதி வினைதீர்க்கும் விநாயகர் கோவில், சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில், குட்டைதிடல் கோவில், ஜி.டி.வி., லே அவுட் செல்வவிநாயகர் கோவில்களிலும் சங்கடஹரசதுர்த்தி ேஹாமம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.உடுமலை கருவூல அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகருக்கு, சிறப்பு பூஜை நடைபெற்றது. சின்னபொம்மன்சாளை கிராமத்தில், செல்வ விநாயகருக்கு, சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை