உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீங்களும், இனி வாக்காளர் தான்! அக்., 18 வரை பெயர்  சேர்க்கலாம்; திருத்தலாம்

நீங்களும், இனி வாக்காளர் தான்! அக்., 18 வரை பெயர்  சேர்க்கலாம்; திருத்தலாம்

கோவை;ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் விபரங்கள் சரிபார்க்கும் பணியை துவங்கியுள்ளனர்.நேற்று முன்தினம் இப்பணிகள் துவங்கின. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியையும் திருத்தியமைப்பது, மறுசீரமைப்பது, வாக்காளர் பட்டியலில் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குவது, தரமற்ற போட்டோக்களுக்கு பதிலாக புதிய போட்டோக்களை இணைப்பது, ஓட்டுச் சாவடி எல்லைகளை மறுசீரமைத்து பட்டியல் குறித்து ஒப்புதல் பெறுவது உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று வாக்காளர் விபரம் சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இப்பணிகள் அக்., 18- வரை நடைபெறும். இதையடுத்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல், அக்.,29ல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அந்தந்த வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகங்களில் வெளியிப்படும்.வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சரியான முறையில் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து ஓட்டுசாவடிகள், ஒன்றிய அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் சரிபார்க்கலாம். இது தொடர்பான வாக்காளர்களுக்கான வேண்டுகோள்களை அக்., 29 முதல் நவ., 28 தெரிவிக்கலாம். இதற்கு டிச.,24 தேதி கடைசி. இறுதி வாக்காளர் பட்டியல், 2025 ஜன.,6ல் வெளியிடப்படுகிறது. கடைசி நாள் வரை காத்திருக்காதீர்வாக்காளர்கள் தங்களது பெயர்களை எளிதாக இணைத்துக்கொள்ளலாம். திருத்தம் செய்ய முகவரி மாற்றம் செய்ய விரிவான, விரைவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இதை வாக்காளர்கள் அதிகம் பயன்படுத்திக்கொள்ளுங்கள். கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம். உங்களை தேடி வரும் அதிகாரிகளிடமோ அல்லது இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பங்களை சமர்பித்து பயனடையலாம். --- - கிராந்திகுமார்,கலெக்டர், கோவை

விண்ணப்பிப்பது எப்படி?

படிவம் 6: புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பவர்கள்... படிவம் 6 ஏ: அயல்நாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க... படிவம் 6பி: ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர்கள்... படிவம் 7: வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் இறந்திருப்பின் அல்லது நிரந்தரமாக குடிபெயர்ந்திருப்பின் அப்பெயரை நீக்கம் செய்ய...படிவம் 8: வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில், பெயர், வயது, உறவுமுறை, முகவரி உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ள...தேவையான படிவத்தை பூர்த்தி செய்து, அலுவலக வேலை நாட்களில் அருகிலுள்ள ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலகங்களில் நேரில் அளிக்கலாம். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க www.voters.eci.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை