உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாற்றுத்திறனாளி முகாமில் 104 பேருக்கு பரிசோதனை

 மாற்றுத்திறனாளி முகாமில் 104 பேருக்கு பரிசோதனை

கோவில்பாளையம்: எஸ்.எஸ். குளத்தில் நடந்த முகாமில், 104 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. முகாமில் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் எட்டு பேர் தலைமையில் மருத்துவக் குழுவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்தனர். புதிய அடையாள அட்டை பெறுதல், ஏற்கனவே உள்ள அடையாள அட்டையை புதுப்பித்தல், கட்டண சலுகை பாஸ் ஆகியவற்றுக்கு பதிவு செய்யப்பட்டது. இலவச உபகரணத்திற்கும் உதவித்தொகைக்கும் வழிகாட்டுதல் செய்யப்பட்டது. முகாமில் 104 மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மணிமேகலை, உள்ளடங்கிய கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, ஆசிரியர் பயிற்றுநர்கள் பங்கேற்றனர். 'அடுத்த முகாம் வரும் 4ம் தேதி காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் பங்கேற்கலாம்,' என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ