உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனைவி மீது கொலை முயற்சி: கணவனுக்கு 3 ஆண்டு சிறை

மனைவி மீது கொலை முயற்சி: கணவனுக்கு 3 ஆண்டு சிறை

கோவை:மனைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில், கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டி, இத்தலார் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்,42. கோவை, கே.கே.புதுார் பகுதியில் மனைவியுடன் தங்கியிருந்து, தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக பணியாற்றி வந்தார். மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டதால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி பிரிந்து சென்று, அதே பகுதியிலுள்ள தாயார் வீட்டில் வசித்தார். கடந்த 2016, ஜூலை, 26 ல், மனைவியை தேடி சென்ற மணிகண்டன், அவரை இரும்பு தடியால் தாக்கினார். சாய்பாபா காலனி போலீசார் , மணிகண்டன் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து கைது செய்தனர். வழக்கு விசாரணை, கோவை மூன்றாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி வேதகிரி, குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு, மூன்றாண்டு சிறை, 500 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பி.கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்....


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை