மேலும் செய்திகள்
உருளைக்கிழங்கு ஏலம் கூடுதல் பதிவாளர் ஆய்வு
1 minutes ago
தொப்பம்பட்டி பிரிவு சிக்னல் பிரச்னைக்கு தீர்வு
3 minutes ago
நிழற்கூரை அவசியம்
6 minutes ago
அன்னுார்: அன்னுார் சத்தி சாலையில், சாமுத்திரிகா மண்டபம் அருகே நேற்று மாலை போலீசார் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பயணிகள் ஆட்டோவை சோதனை நடத்தினர். அதில் தடை செய்யப்பட்ட 345 கிலோ குட்கா பிடிபட்டது. 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ளது. இதையடுத்து குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆட்டோவில் வந்த தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியை சேர்ந்தவரும் தற்போது மாணிக்கம் பாளையத்தில் வசித்து வருபவருமான பழைய டயர் வியாபாரி பொன்ராஜ், 42. மேட்டுப்பாளையம், பாரதி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடாசலபதி, 53. ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் அன்னுார் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குட்கா க டத்தல் குறித்து தகவல் அளித்து பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்த தனிப்பிரிவு முதல் நிலை காவலர் கருணாகரனுக்கு கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்தார்.
1 minutes ago
3 minutes ago
6 minutes ago