| ADDED : நவ 24, 2025 06:25 AM
கோவை: சர்தார் வல்லபாய் பட்டேல் 150வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி, கோவையை சார்ந்த அமிகோஸ் சைக்கிள் குழுவினர், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் மேற்கொண்டனர். 4,250 கிலோ மீட்டர் பயணத்தினை கடந்த அக். 31ம் தேதி தொடங்கி நவ. 17ம் தேதி நிறைவு செய்தனர். இவர்களுக்கு பாராட்டு விழா கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள எஸ்.பி.பி.,சில்க்சில் நடந்தது. அமிகோஸ் சைக்கிள் குழுவை சேர்ந்த சவுந்தர், சக்திவேல், திவாகர், அச்சுத கிருஷ்ணன், ஜனேஷ், சானி ஜோன்ஸ், அமர் ஆகியோர்களுக்கு எஸ்.பி.பி., சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன், இணை நிர்வாக இயக்குனர் அக்சத் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். வீரர்கள் தங்களது பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.